
அரசியலமைப்பின் சட்டப்பகு 253-இல் யூனியன் பட்டியல் எண் 13படி, இந்திய அரசாங்கமானது, “ஊனமுற்றோருக்கான (சம உரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) சட்டம் 1995” (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights and Full Participation) Act, 1995) என்ற சட்டத்தை இயற்றியது. ஊனமுற்றோருக்குச் சமஉரிமையைத் தருவதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு, உருவாக்குதலுக்கு ஊனமுற்றோரின் பங்களிப்பை உறுதி செய்வதுமே இச்சட்டம் இயற்றியதன் முக்கிய நோக்கங்களாகும். இச்சட்டம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஜம்மு – காஷ்மீர் நீங்கலாகப் பரவியுள்ளது. ஐம்மு – காஷ்மீர் அரசாங்கம் “ஊனமுற்றோருக்கான (சம உரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) சட்டம் 1998” (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights & Full Participation) Act, 1998) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.
அனைத்து அரசாங்கங்களும் இணைந்து (மத்திய அமைச்சகம் / மாநில அரசு / யூனியன் பிரதேசம் / மத்திய அல்லது மாநில அரசின் கீழ் பணிபுரியும் நிறுவனங்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தகுதியுடைய அதிகாரிகள்) இத்திட்டத்தின் பல்வேறு பகுதிகளை செயல்படுத்துவது நடைமுறையிலுள்ளது.
ஆசியா பசிபிக் பகுதியில், ஊனமுற்றவர்களின் சமஉரிமை மற்றும் முழு பங்களிப்பு குறித்த அறிக்கையில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. மேலும் எல்லோரும் இணைந்த தடைகளற்ற உரிமைகளை உடைய சமுதாயத்தை விரும்பும் பிவாக்கோ மில்லேனியம் ஃபிரேம்ஒர்க் (Biwako Millennium Framework) ஒப்பந்தத்திலும் இந்தியா கையொப்பம் இட்டுள்ளது. ஊனமுற்றோரின் உரிமைகளையும், கண்ணியத்தையும் காக்கும் அதிகரிக்கும் நோக்கத்துடன் உலக நாடுகள் கலந்து கொண்ட மாநாடு மார்ச் 30, 2007-இல் நடைபெற்றது; இந்தியா உலகநாடுகளின் ஒப்பந்தத்தை 1.10.2008-இல் ஒப்புக்கொண்டது.
No comments:
Post a Comment