Tuesday, June 15, 2010

Human rights of persons with disabilities

Disability and persons with disabilities

Persons with disabilities are entitled to exercise their civil, political, social, economic and cultural rights on an equal basis with others. Disability “summarizes a great number of different functional limitations occurring in any population in any country of the world. People may be disabled by physical, intellectual or sensory impairment, medical conditions or mental illness. Such impairments, conditions or illnesses may be permanent or transitory in nature.” (Standard Rules on the Equalization of Opportunities for Persons with Disabilities). Different expressions are used when referring to persons with disabilities. For example, the term “differently-abled persons” indicates that disability is not perceived as a deviation from the norm. The term “disabled persons” might be misinterpreted to imply that the ability of the individual to function as a person has been disabled. This guide uses the term “persons with disabilities”, which is consistent with the language used by the United Nations (UN).

The UN estimates that there are 500 million persons with disabilities in the world today. This number is increasing every year due to factors such as war and destruction, unhealthy living conditions, or the absence of knowledge about disability, its causes, prevention and treatment.

The majority of persons with disabilities live in less developed countries where people lack access to essential services such as health care. Moreover, there exists a clear relationship between poverty and disability. The risk of impairment is greater for a family that lives in poverty, while and at the same time, a disabled family member places higher demands on the family’s resources.

Among persons with disabilities, the following form particularly vulnerable groups that face discrimination based on two grounds: women, children, elders, victims of torture, refugees and displaced persons, and migrant workers. For instance, women with a disability are discriminated against because of their gender and also because of their disability.

Development of disability policy

The work of the UN constitutes the most important actions taken by an international organization in the area of disability. Based on the International Bill of Rights, the UN formulated the first specific document regarding disabilities in 1971 in the Declaration on the Rights of Mentally Retarded Persons. Important other documents followed but none of them are legally binding. The 1980s mark the main phase of activity regarding establishing international norms pertaining to persons with disabilities. In 1981, the General Assembly declared the first International Year of Disabled Persons. It was followed by the World Programme of Action Concerning Disabled Persons in 1982 and the Decade of Disabled Persons 1983-1992. Throughout the 1990s all UN conferences dealt with disability rights and addressed the need for protective instruments (World Conference on Human Rights 1993, Fourth World Conference on Women 1995, Habitat II 1996). At present, the Ad Hoc Committee on Disabilities is involved in a process to create a convention that protects disabled persons on an international level. A high level of awareness is also demonstrated by the European Union, the year 2003 was declared as the European Year of People with Disabilities. Other important regional observances include the Asian and Pacific Decade of Disabled Persons (1993-2002), the African Decade of Disabled People (2000-2009), and the Arab Decade of Disabled Persons (2003-2012).

Employment for Differently abled People

WE OFTEN hear about employment exchanges both in the public and private sectors offering jobs to normal people.Since, India is now on a take off stage on the world map on all fronts, therefore, it would be ideal if more and more employment exchanges exclusively for differently abled people, both in the public sector as well as private sector are set up in different parts of the country. It would also be great if all the corporates earmark a portion of their staff requirements exclusive for differently abled class of people.
For More Details, click here

மாற்றுத் திறனாளிகளின் தமிழக அரசின் நலத் திட்டம்

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக முதல்வர் கருணாநிதியின் நேரடிப் பார்வையில் தனித்துறை அமைக்கப்படும் என்று அண்மையில் நிதிநிலை அறிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.​ இத்தகைய தனித்துறை அமைக்கப்படுவது இந்தியாவிலேயே தமிழகத்தில் முதலில் நடைபெறுகிறது.​ ​இதுநாள்வரை,​​ மாற்றுத்திறனாளிகள் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் சமூக நலத் துறையின் கீழ்,​​ சமூக நல அமைச்சரின் பொறுப்பில் நடைபெற்று வந்தது.​ தற்போது முதல்வர் நேரடிப் பார்வையில் இத்துறை செயல்படும் என்றாலும்கூட,​​ இத்துறைக்கென தனி அமைச்சரை நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.​ ஏனெனில் அதற்கான தேவை இருக்கிறது.​ ​இந்தியாவில் கடந்தமுறை எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின்படி 2.9 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகள்.​ தமிழ்நாட்டில் இவர்களின் எண்ணிக்கை 16.42 லட்சம்.​ அதாவது 2.6 சதவீதம்.​ இதில் மிகவும் சிக்கலானதும்,​​ முக்கியமானதும் என்னவென்றால்,​​ இவர்களில் 70 சதவீதம் பேர் கிராமங்களில் உள்ளனர்.​ நகர்ப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மட்டுமே அரசின் நலத் திட்டங்களின் பயனைப் பெற முடிகிறது என்பதும்,​​ கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அரசின் பயனையும் பெறாமல் கல்வியும் பெறமுடியாமல் மெல்ல மெல்ல காலவெள்ளத்தில் பின்தள்ளப்படுகிறார்கள்.​ மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் 1.25 லட்சம் பேர் தங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர்.​ இவர்கள் மட்டுமே அரசின் பலன்களை பெறுகிறார்கள்.​ மற்றவர்கள் அரசின் நலத்திட்டம் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருக்கின்றனர்.​ ​மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டத்துக்காக நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.176 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.​ இத்திட்டத்தில்,​​ மாணவர்களாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் உணவுப் படி ரூ.200 லிருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.​ ஆயினும்,​​ இன்னும் செய்யவேண்டியவை நிறைய இருக்கின்றன.​ அவற்றைச் செய்யும்போது இன்னும் நன்றாக இருக்கும்.உடற்குறையால்,​​ பார்வையிழப்பால்,​​ செவித்திறன் குறைவால் 40 சதவீதம் பாதிக்கப்பட்டோர்,​​ மூளைவளர்ச்சி குன்றியோர் ஆகியோரை மாற்றுத் திறனாளிகள் என்று வகைப்படுத்துகிறார்கள்.​ ஆனால்,​​ இவர்களுக்காக நடைபெறும் சிறப்புப் பள்ளிகளின் எண்ணிக்கை,​​ சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர் எண்ணிக்கையைக் கணக்கிட்டால்,​​ அவை தேவைக்குத் தகுந்தபடியாக இல்லை.இத்தகைய மாற்றுத் திறனாளிகளின் கல்விக்காக சில திட்டங்கள் இருந்தாலும்கூட,​​ இன்றைய நவீன உலகத்துடன் போட்டியிடும் வகையிலான தொழிற்கல்வி அளிக்கும் புதிய பயிற்சிகள் அரசு நிறுவனங்களில் கிடைப்பதில்லை.​ வழக்கமாக சொல்லித்தரும் அதே காலாவதியான அதே தொழிற்பயிற்சிகளைத்தான் அளிக்கின்றனர்.​ சில தனியார் அமைப்புகள்,​​ வெளிநாட்டு நிதியுதவியைக் கொண்டு அமைத்துள்ள,​​ மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சிக் கூடங்கள் ஆச்சரியத்தை தந்தாலும்,​​ அரசுத் தரப்பில் இத்தகைய முயற்சிகள் இதுவரை இல்லை என்பதே உண்மை.​ ​மாற்றுத் திறனாளி என்பவர் இரண்டு வகையிலும் பாதிக்கப்பட்டிருப்பவர்.​ அவரால் மற்றவர்களைப்போல செயல்பட முடியாது என்பது ஒரு பாதிப்பு.​ மற்றவர்களுக்கு இணையாகச் சம்பாதித்தாலும்,​​ தனது ஊனத்தை சரிக்கட்ட ஒரு தனிநபரை அமர்த்திக்கொள்ளும் கட்டாயம் இருப்பதால் அவரது வருமானத்தின் கணிசமான பகுதி அதற்காக செலவாகிப் போகிறது.​ ​மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக தன்னார்வ அமைப்புகள் நடத்தும் பகல்நேர மையம்,​​ உண்டுறைப் பள்ளி ஆகியவற்றுக்கு அரசு நிதியுதவி அளிப்பதுடன்,​​ மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கேற்றபடி கட்டடங்கள் கட்டுவதற்காக மானியம்கூட தருகிறது.​ ஆனால் மிகச் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே உண்மையான தொண்டினை அளிக்கின்றன.​ மற்றவர்கள் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு,​​ வெறுமனே தலைகள் கணக்கைக் காட்டி சம்பாதிக்கின்றன என்பதுதான் நடைமுறை உண்மை.​ இத்தகைய மோசமான தன்னார்வத் ​ தொண்டு நிறுவனங்களின் பதிவை ரத்து செய்வதன் மூலம்,​​ ஓரளவு ஒழுங்கை நிலைநிறுத்த முடியும்.அரசு அலுவலகங்கள் மிகச் சிலவற்றில் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்காக சாய்தள மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.​ குறிப்பாக,​​ இத்தகைய சாய்தள வசதி கொண்ட பள்ளிகள் எத்தனை என்று கணக்கிட்டால்,​​ விரல்விட்டு எண்ணிவிடலாம்.விமான நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக தனி கழிவறைகள் உள்ளன.​ அவை அவர்தம் ஊனத்தைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட கழிப்பறைகள்.​ ஆனால் இத்தகைய கழிப்பறைகள் அரசு அலுவலகங்களிலோ அல்லது பள்ளிகளிலோ கிடையாது.​ உடற்குறை,​​ பார்வை குறையுள்ளவர்கள் மற்றவர் உதவியில்லாமல் இந்தக் கழிவறையைப் பயன்படுத்த முடியாது.​ கழிவறையில் உட்கார்ந்தபின் ஊன்றி எழுவதற்கு ஏதுவாக,​​ சுவரில் கம்பிகள் பொருத்தப்பட்ட கழிவறைகளே இல்லை.​ பேருந்துகளில்கூட ஊனமுற்றவருக்காக ஒரு இருக்கை உள்ளதே தவிர,​​ அந்த இருக்கை சாதாரண மனிதர் அமரும் அதே இருக்கைதான்,​​ 40 சதவீத உடற்குறை உள்ளவர் இந்த இருக்கையில் அமர்ந்து எழ முடியாது.​ ​மூளை வளர்ச்சி குன்றியவர்கள் நீங்கலாக,​​ மற்ற மூன்று வகைகளில் பாதிப்புகள் கொண்ட மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான ஊதியத்தை சம்பாதிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தர அரசினால் முடியும்.​ மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போலவே,​​ மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தலாம்.​ இவர்தம் திறமைக்கேற்ப அரசுத்துறை வேலைகளையே அயல்பணி ஒப்பந்தமாக செய்துகொள்ள முடியும்.​ மேலும்,​​ கோயில்களில் காலணி பாதுகாத்தல்,​​ பஸ்நிலையங்களில் சைக்கிள் ஸ்டாண்டுகள்,​​ பேருந்து நிலையங்களில் ஓய்வறை நிர்வாகம்,​​ பொருள் வைப்பு நிர்வாகம் ஆகியவற்றை இத்தகைய மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக் குழுக்களுக்கு மட்டுமே வழங்கினால்,​​ அவர்கள் பொருளாதார ரீதியில் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவியாக அமையும்.

Indian Bank Recruiting Clerk…24 Posts reserved for PH

“DIFFERENTLY ABLED NOT DISABLED” (DAND) is an initiative to improve the quality of life for people with disabilities. An accessible online environment to find necessary informations in order to live an ‘independent life’ through interaction with each other. Members, here, can share experiences and knowledges learned over the years. Opinions of people from different walks of life who wants to share their views and give valuable inputs in this connection will be appreciated.

“DIFFERENTLY ABLED NOT DISABLED” (DAND) will also appraise and update the information on latest development in this sector, on disability products, aids and devices. Members will come to know about the devices commonly used by others and the purpose of usage.
An important focus area of this portal would be education,employment and different kind of work opportunities for differently abled individuals, who can utilize their hidden potential in various conventional & unconventional spheres of work. This portal is a great way to interact with other like minded people.
Your views, information, advice and interests are welcomed. Whether an individual wishing to share his or her own experiences, charitable organizations wanting to give information, here is the place to be heard.
Lets be independent and make others independent. Disabled are not unable.

Indian Bank Recruiting Clerk...24 Posts reserved for PH4.052

சுயதொழில் செய்ய மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி ரூ.5 லட்சம் வங்கிக் கடன்


மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செயவதற்கு நிபந்தனையின்றி ரூ. 5 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறு மற்றும் குறு தொழில் தொடங்குவதற்கான சிறப்பு சலுகை விளக்க கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிவகங்கை முன்னோடி வங்கி அலுவலர் ஆர்.பெருமாள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாயத்தேவர், மதுரை காதி கிராமத் தொழில்கள் ஆணைய உதவி டி.வி.அன்புச்செழியன், சிவகங்கை நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் எம்.ஆர்.கோபால், சிவகங்கை மாற்றுத்திறனாளர் நல அலுவலர் சகுந்தலா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்களும் மாற்றுத்திறன் கொண்டோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், மாற்றுத்திறனாளர்கள் சுயதொழில் செய்ய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. வங்கி கடன் தொகையில் 5 சதவீத டெபாசிட் தொகையை கடன்பெறுபவர்கள் செலுத்த வேண்டிய நிலை முன்பு இருந்தது. அந்த நிலை மாறி தற்போது 5 சதவீத தொகையையும் அரசே செலுத்துகிறது. மேலும் ரூ 5 லட்சம் வரை கடன்பெறுவோருக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளர்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு இச்சலுகைகளை வழங்குகிறது. சுயதொழில் செய்ய வங்கிக் கடன் கேட்டு வரும் மாற்றுத்திறனாளர்களின் வேண்டுகோளை அரசு அலுவலர்கள் விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றார்.



Thursday, June 10, 2010

ஊனமுற்றோருக்கு இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு, சமுதாயத்தில் அனைத்து மனிதர்களுக்கும் சமஉரிமை, சுதந்திரம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவற்றைத் தர உறுதியளிப்பது போலவே, அச்சமுதாயம் ஊனமுற்றோரையும் சேர்த்துக் கொண்டதாகவே அமைய வேண்டும் என்று ஐயத்திற்கு இடமின்றி ஆணை பிறப்பித்துள்ளது. அரசியல் அமைப்பானது, பொருள் விவரப் பட்டியல் (schedule of subjects), ஊனமுற்றோருக்கான உரிமைகளை, அதிகாரங்களைப் பெற்றுத்தரும் பொறுப்பினை மாநில அரசுக்கே நேரடியாகத் தந்துள்ளது. ஆகவே, ஊனமுற்றோரின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பெற்றுத் தருவதில் முதன்மைப் பொறுப்பு மாநில அரசுக்கே உரியதாகிறது.

அரசியலமைப்பின் சட்டப்பகு 253-இல் யூனியன் பட்டியல் எண் 13படி, இந்திய அரசாங்கமானது, “ஊனமுற்றோருக்கான (சம உரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) சட்டம் 1995” (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights and Full Participation) Act, 1995) என்ற சட்டத்தை இயற்றியது. ஊனமுற்றோருக்குச் சமஉரிமையைத் தருவதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு, உருவாக்குதலுக்கு ஊனமுற்றோரின் பங்களிப்பை உறுதி செய்வதுமே இச்சட்டம் இயற்றியதன் முக்கிய நோக்கங்களாகும். இச்சட்டம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஜம்மு – காஷ்மீர் நீங்கலாகப் பரவியுள்ளது. ஐம்மு – காஷ்மீர் அரசாங்கம் “ஊனமுற்றோருக்கான (சம உரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) சட்டம் 1998” (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights & Full Participation) Act, 1998) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.
அனைத்து அரசாங்கங்களும் இணைந்து (மத்திய அமைச்சகம் / மாநில அரசு / யூனியன் பிரதேசம் / மத்திய அல்லது மாநில அரசின் கீழ் பணிபுரியும் நிறுவனங்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தகுதியுடைய அதிகாரிகள்) இத்திட்டத்தின் பல்வேறு பகுதிகளை செயல்படுத்துவது நடைமுறையிலுள்ளது.
ஆசியா பசிபிக் பகுதியில், ஊனமுற்றவர்களின் சமஉரிமை மற்றும் முழு பங்களிப்பு குறித்த அறிக்கையில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. மேலும் எல்லோரும் இணைந்த தடைகளற்ற உரிமைகளை உடைய சமுதாயத்தை விரும்பும் பிவாக்கோ மில்லேனியம் ஃபிரேம்ஒர்க் (Biwako Millennium Framework) ஒப்பந்தத்திலும் இந்தியா கையொப்பம் இட்டுள்ளது. ஊனமுற்றோரின் உரிமைகளையும், கண்ணியத்தையும் காக்கும் அதிகரிக்கும் நோக்கத்துடன் உலக நாடுகள் கலந்து கொண்ட மாநாடு மார்ச் 30, 2007-இல் நடைபெற்றது; இந்தியா உலகநாடுகளின் ஒப்பந்தத்தை 1.10.2008-இல் ஒப்புக்கொண்டது.